- தைப்பூசத்திற்கு மாலை அணிந்து, விரதம் இருந்து பக்தர்கள் தைப்பூசத்திற்கு பாத யாத்திரையாக செல்கின்றனர்.
- பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி, பின்னர் பாதயாத்திரையாக பழனி மலைக்கு புறப்பட்டுச் சென்றனர்.
பல்லடம் :
உலகப் புகழ்பெற்ற முருகன் திருத்தலமான பழனி மலைக்கு, ஆண்டு தோறும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் தைப்பூச விழாவுக்கும்,பங்குனி உத்திரத்திற்கும் பாதயாத்திரையாக செல்கின்றனர். திருப்பூர்,கோவை மாவட்டங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரை செல்கின்றனர்.
இதற்கிடையே இந்த வருட தைப்பூசத்திற்கு மாலை அணிந்து, விரதம் இருந்து பக்தர்கள் தைப்பூசத்திற்கு பாத யாத்திரையாக செல்கின்றனர். அந்த வகையில் பல்லடம் பச்சாபாளையம் வீரவேல் காவடி குழுவினர் விநாயகர் கோவிலில், பொங்கல் வைத்து
வழிபட்டனர். பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி, பழனி மலைக்கு பாதயாத்திரையாக புறப்பட்டார்கள்.
இதே போல் பச்சாபாளையம் மாகாளியம்மன் கோவிலில் காவடி குழுவினர், முருகன், விநாயகர், மாகாளியம்மன் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி, பின்னர் பாதயாத்திரையாக பழனி மலைக்கு புறப்பட்டுச் சென்றனர்.
இதே போல, பனப்பாளையம் மாரியம்மன் கோவிலில் இருந்து பழனி பாதயாத்திரை குழு புறப்பட்டு சென்றது.