திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி சார்பில் ஒரு கோடி பனை விதை நடும் பணி - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்
- ஓடக்கரை கடற்கரை பகுதியில் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகளால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனை விதைகள் நடவு செய்யப்பட்டன.
- எல்-பாஸ் விழிப்புணர்வு இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜ்கமல் மாணவிகளுக்கு பனை விதைகளை நடும்முறை குறித்த செய்முறை விளக்கம் அளித்தார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அணிகள் 49, 50 மற்றும் திருச்செந்தூர் பகுதி பனை வாரியத்துடன் இணைந்து தமிழகம் முழுவதும் ஒரு கோடி பனை விதை நடும் பணியின் ஒரு பகுதியாக வீரபாண்டி யன்பட்டிணம் அருகில் உள்ள ஓடக்கரை கடற்கரை பகுதியில் கல்லூரி முதல்வர் முனைவர் பொ. ஜெயந்தி வழிகாட்டுதலின்படி பனை விதைகளை நடும் பணி நடைபெற்றது.
5 ஆயிரம் பனை விதைகள்
அதற்கு முதற்கட்டமாக கல்லூரி மாணவிகளால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனை விதைகள் சேகரித்து வைக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து அவற்றை ஓடக்கரை கடற்கரை பகுதியில் கல்லூரியின் நாட்டு நலப்பணி த்திட்ட மாணவிகளால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனை விதைகள் நடவு செய்யப்பட்டன. பனை விதைகள் நடும்பணியில் பனை வாரிய தனிச்செயலாளர் ஜெபராஜ் டேவிட் மாணவிகளுக்கு பனையின் இன்றியமையாமை குறித்தும், வருங்கால சந்ததியினருக்கு பனை பயன்படும் விதம் குறித்தும் இன்றைய தலைமுறை யினரின் பங்களிப்பு குறித்தும் எடுத்துரைத்தார். எல்-பாஸ் விழிப்புணர்வு இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜ்கமல் மாணவிகளுக்கு பனை விதைகளை நடும்முறை குறித்த செய்முறை விளக்கம் அளித்தார்.
அமைச்சர் தொடங்கி வைத்தார்
நிகழ்ச்சியில் தமிழக மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். எல்-பாஸ் விழிப்பு ணர்வு இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜ்கமல், மாவட்ட பொறுப்பாளர் காமராசு நாடார், பனை வாரிய தனிச்செயலாளர் ஜெபராஜ் டேவிட், காயல்பட்டினம் நகராட்சி தலைவர் முத்துமுகமது, கவுன்சிலர் சுகு, திருச்செந்தூர் பனை வாரிய உறுப்பினர்கள் ஆன்டோ, பிரிட்டன், திருச்செந்தூர் தாசில்தார் வாமணன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடு களை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் ஜான்சி ராணி, முனைவர் சாந்தா ஆகியோர் செய்திருந்தனர்.