உள்ளூர் செய்திகள்
சட்டசபையில் பா.ம.க.வினர் வெளிநடப்பு
- வன்னியர் இடஒதுக்கீட்டு ஆணையத்தின் காலக்கெடு நீட்டிக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது.
- தமிழ்நாட்டில் மிகவும் பின் தங்கிய சமூகமாக வன்னியர் சமூகம் உள்ளது.
சென்னை:
சட்டசபையில் இன்று பா.ம.க. எம்.எல்.ஏ. ஜி.கே.மணி இடஒதுக்கீடு சம்பந்தமாக பேச முற்பட்டார். ஆனால் சபாநாயகர் அதற்கு அனுமதி மறுத்தார். அரசியல் செய்யும் இடம் இதுவல்ல என்று அனுமதி மறுத்தார். இதனால் ஜி.கே.மணி உள்ளிட்ட பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் ஜி.கே.மணி, சட்டசபைக்கு வெளியே நிருபர்களிடம் கூறியதாவது:-
வன்னியர் இடஒதுக்கீட்டு ஆணையத்தின் காலக்கெடு நீட்டிக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. வேதனை அளிக்கிறது. இதுதொடர்பாக சட்டப்பேரவையில் பேச முயற்சி செய்தபோது சபாநாயகர் எங்களை பேச அனுமதிக்கவில்லை. தமிழ்நாட்டில் மிகவும் பின் தங்கிய சமூகமாக வன்னியர் சமூகம் உள்ளது. கல்வியில், பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியவர்களாக இருக்கிறார்கள்.
10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை காலம் தாழ்த்தாமல் உடனே விரைந்து வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.