உள்ளூர் செய்திகள்

கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு மெத்தனால் சப்ளை செய்த வியாபாரிகளிடம் போலீசார் விசாரணை

Published On 2023-05-18 07:28 GMT   |   Update On 2023-05-18 07:28 GMT
  • புதுவை மாநிலத்தை சேர்ந்த பர்கத்துல்லா, ஏழுமலையை போலீசார் நேற்று கைது செய்து விசாரணை நடத்தினர்.
  • இந்த விசாரணையில் மேலும் பல முக்கிய புள்ளிகள் சிக்கலாம் என தெரிய வருகிறது.

விழுப்புரம்:

மரக்காணம் அருகே எக்கிய குப்பம் மீனவர் பகுதி வம்பா மேடு பகுதியில் விற்பனை செய்த கள்ள சாராயத்தை குடித்துவிட்டு 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது சம்பந்தமாக அப்பகு தியில் சாராய விற்பனையில் ஈடுபட்ட 6 பேர்களை மரக்காணம் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் புதுவை மாநிலம் முத்தி யால்பேட்டை பகுதி யை சேர்ந்த பர்கத்துல்லா மற்றும் தட்டாஞ்சாவடி பகுதியை சேர்ந்த ஏழுமலை என்ற மொத்த வியாபாரி களிடம் கள்ளச்சாராயத்தை வாங்கினோம். இந்த சாரா யத்தை நாங்கள் எக்கியர் குப்பம் மீனவர் பகுதியில் விற்பனை செய்தோம் என்று மரக்காணம் பகுதி யில் கைது செய்யப்பட்ட சாராய வியாபாரிகள் போலீசாரிடம் கூறியுள்ளனர் .

இதனைத் தொடர்ந்து புதுவை மாநிலத்தை சேர்ந்த பர்கத்துல்லா மற்றும் ஏழுமலையை போலீசார் நேற்று கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் சென்னை வான கரம் பகுதியில் தொழிற்சா லை அமைத்து அங்கு தயா ரிக்கப்படும் மெத்தனாலை அப்பகுதியை சேர்ந்த இளைய நம்பி வயது (55)ராபர்ட் (50) ஆகியோர் எங்களுக்கு மொத்தமாக வழங்கினர். இந்த மெத்த னால் கலந்த எரி சாரா யத்தை தான் நாங்களும் மரக்காணம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதியில் உள்ள சாராய வியாபாரிகளுக்கு விற்பனை செய்தோம் என்று கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து போலீசார் சென்னை வானகரம் பகுதியில் ரசாயன தொழிற்சாலை அமைத்து மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை விற்பனை செய்த இளைய நம்பி மற்றும் ராபர்ட் உள்ளிட்ட வர்களை கைது செய்து மரக்காணம் போலீஸ் நிலையத்தில் வைத்து தொடர்ந்து ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் மேலும் பல முக்கிய புள்ளிகள் சிக்கலாம் என தெரிய வருகிறது. இதற்கிடையே சாராய வழக்கை கொலை வழக்காக மாற்றி டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். அதன் படி கைது செய்யப்பட்ட சாராய வியாபாரிகள் 11 பேர் மீது கோட்டக் குப்பத்தில் டி.எஸ்.பியாக இருந்த சுனில் கொலை வழக்காக மாற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News