உள்ளூர் செய்திகள் (District)

கார்த்திகை தீபத்திற்கு அகல்விளக்கு தயாரிக்கும் பணி தீவிரம்

Published On 2023-11-22 10:25 GMT   |   Update On 2023-11-22 10:25 GMT
  • 2 மாதங்களுக்கு முன்பிருந்து அகல்விளக்கு தயாரிக்கும் பணியினை துவங்கினர்.
  • ரூ. 1000க்கு விற்கபடுவதால் தயாரிப்பாளர்கள் மகிழ்சிய டைந்துள்ளனர்.

தருமபுரி,

தமிழகத்தில் இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கார்த்திகை தீப திருநாள். ஆண்டு தோறும் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் அகல் விளக்குகளில் எண்ணை ஊற்றி வீடுகளில் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். காத்திகை தீப திருநாளை யொட்டி மண்பாண்ட தொழிலாளர்கள் கார்த்தி கைக்கு 2 மாதத்திற்கு முன்பி ருந்தே அகல் விளக்கு தயாரிக்கும் பணியை துவங்கி விடுவார்கள்.

அதே போல் தருமபுரி அருகேயுள்ள அதியமான்கோட்டை, கிருஷ்ணாபுரம், மல்லி குட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மண்பாண்ட தொழிலாளர்கள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பிருந்து அகல்விளக்கு தயாரிக்கும் பணியினை துவங்கினர்.

இந்நிலையில் கார்த்திகை தீபதிருநாள் இன்னும் சில நாட்களில் வர உள்ள நிலையில் இப்பகுதிகளில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கடந்த ஆண்டு 1000 விளக்குகள் ரூ. 600 முதல் 700 ரூபாய் வரை விற்கபட்ட நிலையில் இந்தாண்டு 1000 விளக்குகள் ரூ. 1000க்கு விற்கபடுவதால் தயாரிப்பாளர்கள் மகிழ்சிய டைந்துள்ளனர்.

மேலும் இங்கு தயாரிக்கும் விளக்குகளை தருமபுரி மாவட்டம் மட்டுமல்லாது சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, ராசிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வந்து மொத்தமாக வாங்கி செல்கின்றனர்.

மேலும் ஏரி, குளம், குட்டைகளில் இருந்த மண் எடுத்து மண்பாண்ட தொழில் செய்து வருகிறோம். மண் எடுப்பதற்காக அனுமதி வழங்கிய அரசு தற்போது இரண்டு வருடமாக மண் எடுக்க அனுமதி வழங்காமல் கெடுபிடி செய்து வருகிறது.

மேலும் ஓசூர் அதியமான் கோட்டை தேசிய நெடுஞ்சாலைகளுக்கு மண் எடுப்பதால் மண் கிடைக்காமல் தங்களால் போதிய அளவில் தயாரிக்க முடியாமல் இருந்து வருகிறோம். ஆகையால் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் தங்களுக்கு குளம் குட்கைளில் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News