புளியங்குடி அய்யாபுரத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு
- அய்யாபுரம் பகுதியில்ஆரம்ப சுகாதார நிலையத்தை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
- மருத்துவ பணிகளை நகராட்சி தலைவர் விஜயா சவுந்தரபாண்டியன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
புளியங்குடி:
புளியங்குடி நகராட்சி 33-வது வார்டு அய்யாபுரம் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதனையடுத்து புளியங்குடி நகராட்சி தலைவரும், மாவட்ட தி.மு.க. மகளிர் தொண்டர் அணி அமைப்பாளருமான விஜயா சவுந்தரபாண்டியன் தலைமை தாங்கி மருத்துவ பணிகளை தொடங்கி வைத்தார்.
விழாவில் நகர்மன்ற துணை தலைவரும், தி.மு.க.நகர செயலாளருமான அந்தோணிசாமி, சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் பொதுமருத்துவர்கள் சூர்யா, ரேவதி, மாவட்ட மலேரியா அலுவலர் தண்டாயுதபாணி, சுகாதாரத்துறை அலுவலர்கள் ராமலிங்கம், பாலாஜி, சர்போஜி, கமிஷனர் சுகந்தி, என்ஜினீயர் முகைதீன் அப்துல் காதர், சுகாதார அலுவலர் கணேசன், 33-வது வார்டு செயலாளர் வெள்ளபாண்டி, ஊர் நாட்டாண்மை எட்வர்ட் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் அய்யாபுரம் இந்திரா தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் டேனியல் இன்பராஜ் நன்றி கூறினார்.