தனியார் வேலைவாய்ப்பு முகாம் பணியில் முழு ஈடுபாட்டுடன் வாழ்வில் வெற்றி பெற வேண்டும்: அமைச்சர்எ.வ.வேலு பேச்சு
- முகாமில் கலந்து கொண்ட அனை வரும் உங்கள் வாழ்வில் ஒருஇலக்கினை வைத்துக் கொள்ள வேண்டும்.
- பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் வளாகத்தில் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, மாவட்டவேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும்மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம்இணைந்து நடத்திய மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினார். ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன், சங்கராபுரம் எம்.எல்.ஏ. உதயசூரியன், உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ. மணிக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல வேலை வாய்ப்பு இணை இயக்குநர் லதா அனைவரையும் வரவேற்றார். முகாமில் பொதுப்பணிகள் நெடுஞ் சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:-வேலைவாய்ப்பு அலு வலகத்தில் பதிவு செய்து, ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் பதிவினை புதுப்பிக்க வேண்டும்.
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதல்-அமைச்சர் தற்போது இத்துறைக்குதிறன் மேம்பாட்டுத்துறை வேலை வாய்ப்பு அலுவலகம் என பெயர் சூட்டியுள்ளார்கள். படித்த அனைத்து இளைஞர் களுக்கும் அரசு வேலை வழங்க இயலாது என்பதனால், தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களின் திறனை மேம்படுத்தி, வேலை வாய்ப்பை வழங்கிட வேண்டும் என் பதற்காகத்தான் இத்த கைய தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப் படுகின்றன.இந்த முகாமில் கலந்து கொண்ட அனை வரும் உங்கள் வாழ்வில் ஒருஇலக்கினை வைத்துக் கொள்ள வேண்டும். இலக்கினை அமைத்துக் கொண்டு வாழ்ந்தால் தான் உழைக்கும் எண்ணம் வரும். எனவே, இம்முகாமில் பணி நியமன ஆணை பெறும் அனைவரும் தங்கள் பணியில் முழு ஈடுபாட்டுடன் இருந்து வாழ்வில் வெற்றிபெற வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் கூறியதாவது:-
தமிழ்நாடு முதல-அைமச்சர் தமிழ்நாட்டில் உள்ள படித்த அனைத்து இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பு உருவாக் கிட வேண்டும் என்ற நோக் கத்தில், செயல்படுத்திய திட்டம் தான் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம். கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 100 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட் டத்தில் இன்று நடைபெறும் 41-வது தனியார் வேலைவாய்ப்பு முகாம். இன்று நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் 150 க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளது. இளைஞர்கள் தாங்கள் விரும்பிய எந்த நிறுவனத்தில் வேண்டுமானாலும் பதிவு செய்யலாம். இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சரியான வேலையை தேர்ந்தெடுக்க வேண்டும். தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும். தனியார் துறைகளில் அதிக அளவில் வேலை வாய்ப்புகள் இருக்கின்றன. இளைஞர்கள் தன்நம்பிக்கையுடனும்,விடாமுயற்சியுடனும் செயல்பட வேண்டும். போராட்டங்கள் இல்லாமல் வாழ்க்கையில் வெற்றிகள் இல்லை, தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றுங்கள். முடியாது என்பது உலகில் இல்லை, வெற்றி என்பதும் வெகு தொலைவில் இல்லை. எட்டும் தூரத்தில் தான் இருக்கிறது. கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம், அலட்சியமான மனிதன் வாழ்க்கையில் வெற்றி பெற்றதாகசரித்திரம் இல்லை எனவே இளைஞர்கள் அனைவரும் வேலைவாய்ப்பை பெற்று வாழ்வில்வெற்றி பெற வேண்டும் . இவ்வாறு அவர் பேசி னார்.
தொடர்ந்து அமைச் சர்கள் பணி நியமனம் செய்யப்பட்ட இளைஞர் களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினர். இந்த முகாமில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து 152 முன்னனி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டன. மாவட்டம் முழுவதும் இருந்து 16 மாற்றுத்திறனாளிகள், 4,520 பெண்கள் உட்பட 10,132 வேலைநாடுநர்கள் கலந்து கொண்டனர். இதில் 338 பெண்கள்மற்றும் 9 மாற்றுத்திறனாளிகள் உட்பட 1021 வேலைநாடு நர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். 64 நபர்கள் திறன் பயிற்சிக்கு பதிவு செய்தனர். இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஸ்வரி பொருமாள், மாவட்ட வருவாய் அலுவலர் சத்திய நாராயணன், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மாவட்ட திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன், துணை இயக்குநர் மணி, உதவி இயக்குநர் பாலமுருகன், ஏ.கே.டி மேல்நிலைப்பள்ளி தாளாளர் மகேந்திரன், அனைத்து உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் முரளிதரன் நன்றி கூறினார்.