உள்ளூர் செய்திகள்
தைப்பூசத்தை முன்னிட்டு பக்தர்கள் பாதயாத்திரை
- தைப்பூசத்தை முன்னிட்டு பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொண்டனர்
- பக்தர்கள் நடை பயணத்தின் போது வள்ளலாரின் அருள் மொழிகளை பொதுமக்களுக்கு எடுத்துக்கூறினர்.
கந்தர்வகோட்டை:
வடலூர் வள்ளலார் கோவிலில் நடைபெறும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த பாண்டி மண்டல சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய பாதயாத்திரை குழுவைச் சேர்ந்த சன்மார்க்க சங்கத்தினர் மதுரையிலிருந்து வடலூர் வரை கடந்த 60 ஆண்டுகளாக பாதயாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சிவஜோதி தலைமையில் 20க்கும் மேற்பட்ட பக்தர்கள் மதுரையிலிருந்து பாதயாத்திரை மேற்கொண்டு, கந்தர்வகோட்டை வள்ளலார் மடத்தில் தங்கி, தொடர்ந்து வடலூருக்கு பாதயாத்திரை மேற்கொண்டனர். சன்மார்க்க சங்க பக்தர்கள் நடை பயணத்தின் போது அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்துதல், உயிர் பலி தவிர்த்தல் உள்ளிட்ட வள்ளலாரின் அருள் மொழிகளை பொதுமக்களுக்கு எடுத்துக்கூறி நடை பயணம் மேற்கொண்டனர்.