குத்துச்சண்டை பயிற்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு உதவி
- புதுக்கோட்டையில் குத்துச்சண்டை பயிற்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா
- மாணவ மாணவி களுக்கு கையுறை , மற்றும் தலைக்கவசத்தை வழங்கப்பட்டது
புதுக்கோட்டை,
அப்துல் காதர் பயிற்சிகள் அளித்து வருகிறார். இங்கு பயிற்சி பெறும் குத்துச்ச ண்டை வீரர்கள் மாவட்ட மாநில அளவில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று வந்துள்ளனர்.மேலும் குத்துச்சண்டை பயிற்சி பெறுபவர்களுக்கு கையுறை மற்றும் தலைக்க வசம் ரூ. 3000, 4000 விலை உள்ளதால் வீரர்கள் வா ங்குவதற்கு மிகுந்த சிரமம் அடைந்து வந்த நிலையில்,இவர்களுக்கு உதவி செய்வதற்காக புதுக்கோ ட்டை ரோட்டரி சங்க தலை வர் ராஜா முஹம்மது ஏற்பா ட்டில் புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் குத்து ச்சண்டை வீராங்க னைக ளுக்கு கையுறை மற்றும் தலைக்கவசம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் புது க்கோட்டை குத்துச்சண்டை கழக தலைவர் எஸ் வி எஸ் ஜெயக்குமார், மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியசாமி துணை ஆளுநர் ஜெயக்குமார் மற்றும் நிர்வாகிகள் வேலு கார்த்திக் புதுக்கோட்டை ரோட்டரி சங்கத்தின் தலைவர் ராஜா முஹம்மது பொருளாளர் அருண் செயலாளர் ராம்பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாணவ மாணவி களுக்கு கையுறை , மற்றும் தலைக்கவசத்தை வழங்கி சிறப்பித்தனர்.குத்துச்சண்டை வீராங்கனைகளுக்கு உதவி செய்த சங்க நிர்வாகிகளுக்கு குத்துச்சண்டை வீராங்க னைகள் மிகுந்த மகிழ்ச்சி யுடன் நன்றி தெரிவித்தனர்.