உள்ளூர் செய்திகள்

பள்ளி வளாகத்தில் ஆபத்தான கட்டிடம் அகற்றும் பணிகள்

Published On 2022-09-01 07:21 GMT   |   Update On 2022-09-01 07:21 GMT
  • பள்ளி வளாகத்தில் ஆபத்தான கட்டிடம் அகற்றும் பணிகள் தொடங்கியது
  • பழுதான சமையல் கூடமும் அகற்றப்பட்டது.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் மேற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் பழைய பழுதான ஓட்டுக்கட்டிடம் ஓடுகள் உடைந்து விழுந்து ஆபத்தான நிலையில் இருந்தது. இந்த கட்டிடம் உடைந்து விழுந்தால் அருகில் உள்ள மாணவர்களின் வகுப்பறை கட்டிடம் மீது விழுந்து ஆபத்து ஏற்படும் என்பதால் நேற்று பழுதான பழைய கட்டிடத்தை இடிக்க கோரி மாணவர்களை பள்ளி வகுப்பறைகளுக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் மரத்தடியில் அமர வைத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

மாணவர்கள், பெற்றோர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தகவலறிந்து வந்த வட்டாரக்கல்வி அலுவலர் கருணாகரன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக கட்டிடம் இடிக்கப்படும் என்று உறுதி அளித்தார். அதன்பிறகு போராட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையில் நேற்று பள்ளி விடுமுறை நாள் என்பதால் பழுதடைந்த ஆபத்தான ஓட்டுக்கட்டிடத்தின் ஓடுகள் அகற்றப்பட்டு சுவர்கள் அகற்றும் பணிகள் தொடங்கியது. அதே போல அருகில் உள்ள பழுதான சமையல் கூடமும் அகற்றப்பட்டது.

Tags:    

Similar News