கந்தர்வகோட்டையில் பஸ் நிலைய விரிவாக்க பணிகள் ஆய்வு
- புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் நடைபெற்று வரும் பஸ் நிலைய விரிவாக்க பணிகளை சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு செய்தார்
- கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய மாவட்ட நிர்வாகம் ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தை பொதுமக்கள் நலன் கருதி கூடுதல் பேருந்துகள் இயக்குவதற்கு வசதியாகவும், மேலும் பேருந்து நிலையத்தின் தரைத்தளத்தை செப்பனிடவும், கூடுதல் கழிப்பறை கட்டவும், குடிநீர் வசதி வேண்டியும் பொதுமக்கள்அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை ஒன்றிய பெருந்தலைவர் கார்த்திக் மழவராயர்ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி ஆகியோரின் முயற்சியால் கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய மாவட்ட நிர்வாகம் ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது.
இந்த நிலையில் பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கு அருகில் உள்ள குட்டையை தனியார் நிறுவன உதவியுடன் தூர்வாரும் பணிகள் நடைபெற்றது.
இந்த பணிகளை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை, ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் மழவராயர், துணைத் தலைவர் செந்தாமரை குமார், ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, துணைத் தலைவர் வெங்கடேசன், ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேந்திரன், திமுக நகரச் செயலாளர் ராஜா ஆகியோர் ஆய்வு செய்தனர்.