உள்ளூர் செய்திகள்

ரூ.650 கோடி செலவில் சென்னையில் மீண்டும் மழைநீர் வடிகால் பள்ளம் தோண்ட முடிவு

Published On 2023-02-05 10:22 GMT   |   Update On 2023-02-05 10:22 GMT
  • சிங்கார சென்னை 2.0 திட்டத்தின்படி இரண்டாம் கட்ட மழைநீர் வடிகால் அமைப்பதற்காக பள்ளம் தோண்டும் பணி நடைபெற உள்ளது.
  • சமூக ஆர்வலர்கள் கூறுகையில் மழைநீர் வடிகால் பணியின்போது மரங்களை வெட்டக்கூடாது. மின்சார கேபிள்களும் சேதம் அடையக்கூடாது என்றனர்.

சென்னை:

சென்னையில் கடந்த வடகிழக்கு பருவ மழைக்கு முன்பு மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்றது. ஆனால் பணிகள் முடிவடையும் முன்பே பருவமழை தொடங்கிவிட்டது. இதையடுத்து இந்த பணிகள் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின்படி இரண்டாம் கட்ட மழைநீர் வடிகால் அமைப்பதற்காக பள்ளம் தோண்டும் பணி நடைபெற உள்ளது. ரூ.650 கோடி செலவில் இந்த பணிகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக அதிகாரிகள் டெண்டர் கோர உள்ளனர்.

ராயபுரம், தேனாம்பேட்டை, திரு.வி.க.நகர், அண்ணாநகர், வளசரவாக்கம், ஆலந்தூர் போன்ற பகுதிகளில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இவற்றில் பெரும்பாலான பணிகள் ஏற்கனவே உள்ள திட்டங்களின் தொடர்ச்சியாகும்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கடந்த பருவமழையின் போது வெள்ளம் ஏற்பட்ட இடங்களை கண்டறிந்து அங்கு மழைநீர் வடிகால் அமைத்து வருகிறோம். முதல் கட்ட பணியின் போது ஏற்பட்ட கலவை குறைவுகள் இரண்டாம் கட்ட பணியின் போது சரி செய்யப்படும்.

இந்த முறை சாலையில் பள்ளம் தோண்டும் முன்பு குடியிருப்பு வாசிகளிடம் ஆலோசனை நடத்துவோம். கடந்த ஆண்டு வெள்ளப் பெருக்கை தடுக்க அவசரமாக பணிகளை மேற்கொண்டோம். இந்த முறை பணிகள் பெருமளவில் நேர்த்தியாக நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், இந்த முறை மழைநீர் வடிகால் பணியின் போது மரங்களை வெட்டக்கூடாது. மின்சார கேபிள்களும் சேதம் அடையக்கூடாது என்றனர்.

Tags:    

Similar News