ராணிப்பேட்டை சிப்காட்டில் ரூ.2 கோடியில் சேமிப்பு கிடங்கு
- முதல் -அமைச்சரால் காணொளி மூலம் திறக்கப்பட்டது
- அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன வளாகத்தில் ரூ.2 கோடியே 20 லட்சம் மதிப்பில் புதியதாக 3400 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு கட்டப்பட்டுள்ளது.
இந்த கிடங்கினை நேற்று தமிழ்நாடு முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார்.
இதை தொடர்ந்து நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு சேமிப்பு கிடங்கை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
3400 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட இந்த கிடங்கில் அரசு நிர்ணயித்துள்ள கட்ட ணத்தின் அடிப்படையில் தனியார் துறை நிறுவன ங்களும் தங்கள் உற்பத்தி பொருட்களை வாடகையின் அடிப்படையில் சேமித்துக் கொள்வதற்கான வழிவகைகள் செய்ய ப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில் ஆற்காடு ஈஸ்வரப்பன்.எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி,சேமிப்பு கிடங்கு நிறுவன மண்டல மேலாளர் வசந்த். மாவட்ட கவுன்சிலர் செல்வம்,ஊராட்சி மன்றத் தலைவர் ஈஸ்வரி, நகரமன்ற உறுப்பினர் வினோத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.