வீட்டில் ரேசன் அரிசி பதுக்கியவர் கைது
- 21 மூட்டைகள் பறிமுதல்
- கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் தலைமையில் போலீசார் நரசிங்கபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது நரசிங்கபு ரத்தில் உள்ள ஒரு வீட்டில் ரேசன் அரிசி மூட்டைகளை அடுக்கி வைத்துக் கொண்டி ருந்த நபர் தப்பிக்க முயன்றுள்ளார்.
அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் நரசிங்கபுரம், உடையார் தெருவை சேர்ந்த சரவணன் (வயது 40) என்பதும் , அங்கு அடுக்கி வைத்திருந்த அரிசி மூட்டைகளை பிரித்து சோதனை செய்த போது அதில் சுமார் 50 கிலோ எடை கொண்ட 21 மூட்டைகளில் சுமார் 1,050 கிலோ ரேசன் அரிசி இருப்பதும் தெரியவந்தது.
ரேசன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அதை ரெயில் மூலம் கர்நாடக மாநிலம், பங்காருபேட்டை கொண்டு சென்று அங்குள்ள ஓட்டல்கள் மற்றும் கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்று வருவது தெரிய வந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள் வாலாஜாவில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படை க்கப்பட்டது.
இது தொடர்பாக குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை போலீசார், சரவணனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.