உள்ளூர் செய்திகள்

காவேரிப்பாக்கத்தில் விழிப்புணர்வு கூட்டம்

Published On 2023-11-22 09:35 GMT   |   Update On 2023-11-22 09:35 GMT
  • குற்றச்செயல்களை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்
  • அச்சம் போக்க இரவு நேர ரோந்து பணி தீவிரம்

காவேரிப்பாக்கம்:

காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையம் எல்லைக்குட்பட்ட திருப்பாற்கடல் மற்றும் அத்திபட்டு கிராமங்களில் நேற்று காவேரிப்பாக்கம் போலீசார் சார்பில் பொதுமக்களுக்கு குற்றசம்பவங்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு காவேரிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமை தாங்கி பேசினார்.

கடந்த 2 நாட்களாக திருப்பாற்கடல் மற்றும் அத்திபட்டு ஆகிய கிராமங்களில் முகமூடி கொள்ளையர்கள் வீடு புகுந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவதாக வதந்திகள் பரவி வருகிறது.

முகமூடி கொள்ளையர்கள் பற்றிய வீண் வதந்தியை நம்பவேண்டாம் மேலும் அதுபோன்ற சம்பவங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்படுகிறது. குற்ற செயல்களை போலீசாரால் மட்டுமே தடுத்து விட முடியாது. பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும். இருப்பினும் பொதுமக்களின் அச்சம் போக்க இரவு நேர ரோந்து பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் திருட்டு, கொள்ளை போன்ற சம்பவங்களில் துப்புதுலக்கி குற்றவாளிகளை பிடிப்பதற்கு வசதியாக தெருக்கள் மற்றும் வீடுகளில் கண்காணிப்பு கேமரா அமைக்க முன் வர வேண்டும்.

மேலும் போலீஸ் அதிகாரிகளின் செல்போன் எண்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News