- அசம்பாவிதம் ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும்
- விவசாயிகள் வலியுறுத்தல்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த ஆலப்பாக்கம் ஊராட்சியில் அதே பகுதியை சேர்ந்த குருநாதன் என்பவருடைய விவசாய நிலத்தின் வழியாக செல்லும் மின்சார ஒயர் மிகவும் தாழ்வான நிலையில் உள்ளதால் ஒன்றோடு ஒன்று உரசி அடிக்கடி நெருப்பு பொறி உண்டாவதாக பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் 2 மின் கம்பங்கள் இடையே உள்ள தூரம் அதிகமாக இருப்பதால் பலத்த காற்று வீசும் போது ஒன்றோடு ஒன்று உரசி விவசாய பம்பு செட் மோட்டார்கள் அடிக்கடி சேதம் அடைவதாக அப்பகுதி யில் உள்ள விவசாயிகள் தெரிவித்தனர்.
மேலும் மின்சார வாரிய அலுவ லர்களிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடி க்கையும் எடுக்கவில்லை என அவர்கள் குற்றம் சாட்டினர்.
இந்த ஒயரானது ஒன்றோடு ஒன்று உரசாமல் இருக்க அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கற்களை கட்டி மின்சார ஒயரின் மீது தொங்கவிட்டு உள்ளனர்.
இதனால் பெரிய அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதை சரி செய்து தர வேண்டும் என அப்பகுதியில் உள்ள விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.