உள்ளூர் செய்திகள்

ராணிப்பேட்டை அருகே நெல்லிகுப்பத்தில் சோனியா காந்தி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்டை கே.எஸ்.அழகிரி திறந்து வைத்து பேசிய காட்சி.

சோனியா காந்தி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் திறப்பு விழா

Published On 2023-07-09 08:40 GMT   |   Update On 2023-07-09 08:40 GMT
  • தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி திறந்து வைத்தார்
  • ஏராளமானோர் கலந்த கொண்டனர்

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை அடுத்த நெல்லிகுப்பம் பகுதியில் சோனியா காந்தி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் திறப்பு விழா மற்றும் கொடி கம்பம், கல்வெட்டு திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் மாநில செயலாளர் அக்ராவரம்.கே. பாஸ்கர் தலைமை தாங்கினார். சோளிங்கர் ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ, முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் பஞ்சாட்சரம் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு சோனியா காந்தி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் பெயர் பலகையை திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி கொடி ஏற்றி, கல்வெட்டு திறந்து வைத்தார்.

இதனை தொடர்ந்து பெல் ஆன்சிலரி கம்பெனி உரிமையாளர்கள் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியை சந்தித்து கோரிக்கை வைத்து பேசினர்.

அக்ராவரம் பகுதியிலும் கட்சி கொடி ஏற்றி, கல்வெட்டினை திறந்து,பின்னர் ராகுல் காந்தி தெருவை தொடங்கிவைத்தார். .

பின்னர் கே.எஸ். அழகிரி கூறியதாவது:-

பாஜக, ஆர்.எஸ்.எஸ் இயக்கம் ஆகியவை ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாத அரசியல் இயக்கங்கள்.

மகாராஷ்டிராவில் சரத்பவாரின் கட்சி உடைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சிவசேனா கட்சியை உடைத்தார்கள். சிவசேனாவை இரண்டாக உடைத்து ஒரு தரப்பு பாஜகவுக்கு ஆதரவாகவும், சரத்பவார் கட்சியில் ஒரு தரப்பு பாஜகவுக்கு ஆதரவாக உள்ளனர். பாஜகவுக்கு ஆதரவு அளித்துள்ள இரண்டு தரப்புகளும் அட்டை கத்திகள் தான்.

தமிழக முதல் அமைச்சர் மதசார்பற்ற கூட்டணி கட்சிகளுக்கு தளபதியாக செய்படுகிறார். எனவே அவரை பலவீனப்படுத்த வேண்டும். அவருக்கு எதிராக செயல்பட வேண்டும். அவருடைய அரசை செயலிழந்த அரசாக மாற்ற வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால் அது தமிழகத்தில் முடியாது.

தமிழக அரசியல் என்பது வேறு, வடஇந்திய பா.ஜ.கவால் தமிழக அரசியலை புரிந்து கொள்ள முடியாது. தமிழக அரசியலில் எங்கள் கருத்துகள் தான் வெற்றி பெரும்.

காவிரியில் தண்ணீர் திறந்துவிட முடியாது என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. காவிரி பொது சொத்து, இதற்கு ஆணையம்,உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள் உள்ளன.

தமிழ்நாடு காங்கிரஸ் தமிழ்நாடு அரசு பக்கம் இருக்கும். தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு கணக்கு தெரியவில்லை. விதவை உதவிதொகை, முதியோர் உதவிதொகை, மாற்றுத்திறனாளி உதவிதொகை இது இல்லாமல் மகளிர் உரிமை தொகை என இந்த நான்கையும் கூட்டி பார்த்தால் 70 சதவீதம் பெண்கள் பயன்பெறு வார்கள். மேலும் தகுதியான வர்களுக்கு மகளிர் உரிமைதொகை கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாநில செயலாளர் அக்ராவரம். கே.பாஸ்கர், மாவட்ட தலைவர் பஞ்சாட்சரம், வி.சி.மோட்டூர்.கணேசன் உள்பட மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

முன்னதாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் நினைவுயொட்டி,கட்சி கொடி ஏற்றி , கல்வெட்டுகளை,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி திறந்து வைத்தார்.

Tags:    

Similar News