உளுந்தூர்பேட்டையில் முதல்நிலை போலீஸ்காரர் பணியிடை நீக்கம்
- புகையிலை பொருட்களை விற்பனை செய்தவழக்கில் கைது செய்யப்பட்டர்.
- காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகை யில் குற்றச்செயல்களில் ஈடுபட்டார்.
கள்ளக்குறிச்சி:
உளுந்தூர்பேட்டை அருகே பூ.மலையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்கியராஜ். இவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தவழக்கில் கைது செய்யப்பட்டர். இந்நிலையில் இவரிட மிருந்து உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில்பணிபுரிந்து வந்த முதல்நிலை போலீசார் பிரபாகரன் ரூ.3,000 கையூட்டாக பெற்றதாக கூறப்படுகிறது.
இதையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் புகையிலை பொருட்கள் விற்பனை செய்து கைது செய்யப்பட்ட நபரிடம், கையூட்டு பெற்ற போலீசார் பிரபாகரனை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களான கஞ்சா, குட்கா, கள்ளச்சாராயம் காய்ச்சுதல், கடத்துதல் மற்றும் விற்பனை செய்தல்போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளி களிடம் தொடர்பில் இருந்துகாவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகை யில் குற்றச்செயல்களில் காவல்துறையினர் ஈடுபட்டாலோ அல்லது துணைபோனாலோ அவர்கள் மீது துறைரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.