பணிகளின் போது கைபேசி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
சங்கரன்கோவில் மின்வாரிய ஊழியர்களுக்கு பாதுகாப்பு பயிற்சி முகாம்
- சங்கரன்கோவில் கோட்ட உதவிசெயற்பொறியாளர்கள், களப்பணியாளர்கள் உள்ளிட்டோர் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர்.
- பயிற்சி வகுப்பினை பற்றி காணொலி காட்சி மூலம் செந்தில் ஆறுமுகம் விளக்கி கூறினார்.
சங்கரன்கோவில்:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின்பகிர்மான வட்டம் தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் கோட்ட அளவில் அலுவலர்கள் மற்றும் களப்பணியாளர்களுக்கு மின்பகிர்மானத்தில் பாது காப்புடன் பணிபுரிவது பற்றிய பயிற்சி வகுப்பு சங்கரன்கோவில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த பயிற்சி வகுப்பிற்கு சங்கரன்கோவில் கோட்ட செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கி பாதுகாப்பு நெறிமுறைகளுடன் பணிபுரிய ஆலோசனைகள் வழங்கினார். இதில் சங்கரன்கோவில் கோட்ட உதவிசெயற் பொறி யாளர்கள், உதவி பொறி யாளர்கள் மற்றும் கள ப்பணி யாளர்கள் கலந்து கொண்டனர். நெல்லை தொழில்நுட்ப பயிற்சி மற்றும் மேம்பாடு பிரிவு ஏற்பாட்டின் பேரில், நெல்லை மண்டல பாது காப்பு அதிகாரி செந்தில் ஆறுமுகம் பயிற்சி வகுப்பினை பற்றி காணொலி காட்சி மூலம் அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு விளக்கி கூறினார். நிலை இணைப்பு செய்ய வேண்டிய அவசியம், கையுறை பயன்படுத்த வேண்டிய அவசியம், இடுப்பு கயிறு பயன்படுத்தப்பட வேண்டிய அவசியம் பற்றி விளக்கி கூறினார். பணிகளின் போது கைபேசி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் அப்பொழுது தான் சிந்தனை சிதறல் இல்லாமல் பணி புரிய முடியும் என்றார். நிகழ்ச்சி க்கான ஏற்பாடு களை நகர் புறம் I பிரிவு உதவி மின் பொறியாளர் கருப்பசாமி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.