களக்காடு அருகே கீழதேவநல்லூர் சிவன் கோவிலில் சனி பிரதோஷ விழா - பக்தர்கள் தீபங்கள் ஏற்றி வழிபாடு
- பிரதோஷத்தையொட்டி சோமநாதசுவாமி, கோமதி அம்பாள், நந்தி பகவான் உள்ளிட்ட சுவாமிகளுகு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது.
- கோவில் சன்னதிகள், பிரகாரங்கள், மண்டபங்களில் வைக்கப்பட்டிருந்த விளக்கு களில் பக்தர்கள் தீபம் ஏற்றினர்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள கீழதேவநல்லூர் கோமதி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோவிலில் ஆனி மாத சனி பிரதோஷ விழா நடந்தது. இதையொட்டி சோமநாதசு வாமி, கோமதி அம்பாள், நந்தி பகவான் உள்ளிட்ட சுவாமிகளுகு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது.
விரைவில் இக்கோவிலில் திருப்பணிகள் நடைபெற வேண்டி நந்தியம் பெருமானுக்கு 1008 செவ்விளநீர் அபிஷேகம் நடத்தப்பட்டது. அதன்பின் விஷேச அலங்கார தீபாரா தனைகள் நடைபெற்றது. சுவாமி, அம்பாளுக்கு செண்பகம், மனோரஞ்சிதம், தாமரை மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டி ருந்தது. சுவாமி, அம்பாள், நந்தி பகவானுக்கு 3 அர்ச்சகர்களை கொண்டு ஒரே நேரத்தில் அபிஷேக, தீபாராதனைகள் நடத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து, 1008 தீபம் ஏற்றி வழிபாடு நடந்தது. கோவில் சன்னதிகள், பிரகாரங்கள், மண்டபங்களில் வைக்கப்பட்டிருந்த விளக்கு களில் பக்தர்கள் தீபம் ஏற்றினர்.
இதனால் தீப ஒளியில் கோவில் சன்னதிகள், மண்டபங்கள் ஜொலித்தன. விழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை திருப்புடை மருதூர் ஸ்ரீ கஜானன் மஹராஜ் கைங்கர்ய சபா செய்திருந்தனர்.