- உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- பாபநாசத்தில் பல்வேறு பகுதியில் 500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது.
மெலட்டூர்:
தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள திருக்கருகாவூரில் உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு திருக்கருகாவூர் யூனியன் வங்கி சார்பில் மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் யூனியன் வங்கி திருச்சி மண்டல மேலாளர் லாவண்யா கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சி யை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் சோழன் மழலையர் பள்ளி வளாகம், கிராம ஊராட்சி செயலக வளாகம் மற்றும் காவல் நிலைய வளாகம் உள்பட பாபநாசத்தில் பல்வேறு பகுதியில் 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்ச்சியில் திருக்கருகாவூர் யூனியன் வங்கிகிளைமேலாளர் தீபக் சிங். உதவி மேலாளர் வெற்றிவேல், வங்கி ஊழியர் உமா, திருக்கருகாவூர் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜ், ஊராட்சி செயலர் கருணானந்தம், சோழன் பள்ளி தாளாளர் சிவசண்முகம் மற்றும் ஆசிரியர்கள். மாணவர்கள். வங்கி ஊழியர்கள் பங்கேற்றனர்.