உள்ளூர் செய்திகள்

மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் குவிந்து கிடக்கும் கால்வாய் கழிவுகள்

Published On 2022-11-03 09:42 GMT   |   Update On 2022-11-03 09:42 GMT
  • தினமும் கோவை, திருப்பூர், ஈரோடு, சென்னை, திருச்சி, கரூர், நாகர்கோவில், உள்ளிட்ட பகுதிகளுக்கும் பஸ் இயக்கப்படுகிறது.
  • தினசரி மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும்.

மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையம் நகராட்சியில் இருந்து வெளியூர் மற்றும் கிராமப் பகுதிகளுக்கான பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது.

இங்கிருந்து தினமும் கோவை, திருப்பூர், ஈரோடு, சென்னை, திருச்சி, கரூர், நாகர்கோவில், உள்ளிட்ட பகுதிகளுக்கும் காரமடை, வெள்ளியங்காடு, புளியம்பட்டி, சிறுமுகை உள்ளிட்ட ஊரக பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதனால் தினசரி பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும். இந்த சூழ்நிலையில் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் வெள்ளியங்காடு, சிறுமுகை ஆகிய ஊரகப்பதிகளுக்கு செல்லும் பேருந்து நிலையத்தில் கழிவுநீர் செல்லும் கால்வாயில் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் குழி தோண்டி கழிவுகளை அங்கேயே எடுத்து வைத்துள்ளனர்.

மேலும் பல மாதங்களாக கழிவுநீர்கால்வாயின் காங்கிரட் பலகைகள் மூடப்படாமல் திறந்த நிலையிலேயே உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசி வருவதால் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் மூக்கை பிடித்துவாறும், முகம் பிடித்து செல்லும் நிலை உருவாகியுள்ளது.

எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து கிடப்பில் உள்ள பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News