உள்ளூர் செய்திகள்

சங்கராபுரம் நிதி நிறுவனத்தில் ரூ. 18 லட்சம் கையாடல்: 2 பேர் கைது

Published On 2023-03-15 09:30 GMT   |   Update On 2023-03-15 09:30 GMT
  • கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ராமகிருஷ்ணா நகரில் நிதிநிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது இதில் பணிபுரிந்த 3 பேரும் சேர்ந்து 17 லட்சம் 98 ஆயிரத்து 964 ரூபாயை கடந்த 2022 -ம் ஆண்டு கையாடல் செய்தனர் என கிளை மேலாளர் அய்யனார்(33) சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். .
  • இந்தநிலையில், கையாடல் தொகை ரூ. 10 லட்சத்திற்கு மேல் உள்ளதால் வழக்கு மாவட்ட குற்றப்பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ராமகிருஷ்ணா நகரில் நிதிநிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இதில் சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் கிராமத்தை சேர்ந்த அழகுவேல் மகன் தினேஷ், மூக்கனூர் கிராமம் ஏழுமலை மகன் அய்யப்பன் ஆகியோர் மக்கள் தொடர்பு பணியாளர்களாகவும், மரூர் கிராமத்தை சேர்ந்த கண்ணுசாமி மகன் அய்யப்பன் உதவி மேலாளராகவும் பணிபுரிந்தனர். இவர்கள் 3 பேரும் சேர்ந்து 17 லட்சம் 98 ஆயிரத்து 964 ரூபாயை கடந்த 2022 -ம் ஆண்டு கையாடல் செய்துவிட்டதாக கூறி, கிளை மேலாளர் அய்யனார்(33) சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.அதில் நிறுவனத்தின் தணிக்கை குழுவினர் தணிக்கை செய்த போது மேற்கூறிய 3 பேரும் உறுப்பினர்களிடம் இருந்து தனிதனியாக பணத்தை கையாடல் செய்தது தெரியவந்தது. மொத்தம் 67 உறுப்பினரிடமிருந்து 17 லட்சத்து 98 ஆயிரத்து 964 கையாடல் செய்துள்ளனர்.

பணத்தை திரும்பி கேட்டும் அவர்கள் தரவில்லை என்று தொிவித்து இருந்தார். இது குறித்து சப்-இன்ஸ்நபெக்டர் நரசிம்ம ஜோதி வழக்கு பதிவு செய்தார். இந்தநிலையில், கையாடல் தொகை ரூ. 10 லட்சத்திற்கு மேல் உள்ளதால் வழக்கு மாவட்ட குற்றப்பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் பேரில் குற்றப்பிரிவு இன்ஸ்சபெக்டர் சண்முகம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் பாண்டி யன், செண்பகவல்லி, காவலர் உதயகுமார், வெங்கடேசன் குழுவினர் விசாரணை மேற்கொண்டு 3 பேரையும் தேடிவந்தனர். இதில், அய்யப்பனை சங்காரபுரம் தாலுகா அலுவலகம் எதிரே வைத்தும், தினேஷை சங்கராபுரம் நி பஸ் நிலையம் அருகில் வைத்தும் போலீசார் கைது செய்தனர். மேலும் மூக்கனூரை சேர்ந்த அய்யப்பனை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News