உள்ளூர் செய்திகள்
நுங்கம்பாக்கத்தில் சாலையோர தர்பூசணி கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு
- எலி கடித்த பழங்கள் சிக்கியது. இது அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- அதிகாரிகள் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்து தரமற்ற பழங்களை பறிமுதல் செய்தனர்.
சென்னை:
சென்னை நுங்கப்பாக்கத்தில் லயோலா கல்லூரி சுற்றுச்சுவரையொட்டிய பகுதியில் ஏராளமான தர்பூசணி கடைகள் உள்ளன. இந்த கடைகளில் கோடை காலங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று தர்பூசணியை வாங்கி சாப்பிட்டு தாகம் தணிப்பார்கள்.
இந்த கடைகளில் விற்பனை செய்யப்படும் தர்பூசணி பழங்கள் மற்றும் கிர்ணி பழங்கள் தரமற்றவையாக இருப்பதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து இன்று காலையில் அதிகாரிகள் அங்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது பழங்களின் தரத்தை பரிசோதித்தனர். இதில் எலி கடித்த பழங்கள் சிக்கியது. இது அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து அதிகாரிகள் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்து தரமற்ற பழங்களை பறிமுதல் செய்தனர்.