விவேகானந்தர் சொற்பொழிவு ஆற்றிய இடத்தில் நினைவு மணி மண்டபம் அமைக்க கோரிக்கை
- விவேகானந்தர் சொற்பொழிவு ஆற்றிய இடத்தில் நினைவு மணி மண்டபம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- மகாத்மா காந்தி யாத்திரையாக வந்த இடத்தில் மகாத்மா காந்தி சிலை உள்ளது.
மானாமதுரை
சுவாமி விவேகானந்தர் சிகாகோ மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றியபின் சிவகங்கை மாவட்டம் மானா மதுரை வந்தார். பின்னர் ராமேசுவரம், பாம்பன் சென்றார். அவரது பயண ஏற்பாட்டைசெய்த ராமநாதபுரம் மன்னருக்கு நன்றி தெரிவித்தபின் பரமக்குடி, மானாமதுரை, கும்பகோணம் சுவாமி ஆகிய இடங்கில் விவேகானந்தர் சொற்பொழிவு ஆற்றினார். அவர் மானாமதுரைக்கு வந்தபோது பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
அந்த இடம் மானாமதுரை சுந்தரபுரம் தெருவில் உள்ளது. சொற்பொழிவு ஆற்றியபின் அந்த பகுதியில் உள்ள வீட்டில் தங்கி மறுநாள் பயணத்தை தொடர்ந்தார். சுவாமி விவேகானந்தர் வந்து பேசிய இடத்தில் நினைவு பீடம் மட்டும் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மானாமதுரைக்கு விவேகானந்தர் வந்த நாள் மற்றும் பிறந்த நாள், நினைவு நாளில் பூமாலைகள் அணிவித்து மரியாதை செய்யப்பட்டுவருகிறது.
இதன் அருகே மகாத்மா காந்தி யாத்திரையாக வந்த இடத்தில் மகாத்மா காந்தி சிலை உள்ளது. இப்பகுதியில் நூலகம், சிறுவர் பூங்கா உள்ளது. இதேபோல் சுவாமி விவேகானந்தர் சொற்பொழிவு செய்த இடத்தில் நினைவு மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.