பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை
- துறை சார்ந்த அலுவலர்கள் சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
- மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் அனைத்துத் துறைகளின் சார்பில் மேற்கொள்ளப பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை ஆணையாளர் லால் வேனா பார்வையிட்டார்.தொடர்ந்து கலெக்டர் ஆஷா அஜீத் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.
பின்னர் லால்வேனா கூறியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் தமிழக அரசால் செயல்ப டுத்தப்பட்டு வரும் அனைத்து நலத்திட்டப் பணிகள் தொடர்பாகவும் பொதுமக்களுக்கு தேவை யான அடிப்படை வசதி களை மேம்படுத்தும் வித மாகவும், நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாகவும் தொடர்ந்து களஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதுமட்டுமன்றி துறை ரீதியாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட முதன்மை அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டமும் மேற்கொள்ளப்பட்டு பணிகளின் நிலை குறித்து மாதந்தோறும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், தேவையான நிதிநிலைகள் மற்றும் செலவினங்கள் ஆகியன குறித்தும் துறைகளின் சார்பில் நடைபெற்று வரும் பணிகள் மற்றும் மேற் கொள்ளப்பட வேண்டிய பணிகள் ஆகியன குறித்தும் துறை சார்நத அலுவ லர்களுடன் ஆலோசனை செய்யப்பட்டது.
துறை சார்ந்த அலுவ லர்கள் சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படை யில் அடுத்த கட்ட நடவ டிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.