உள்ளூர் செய்திகள்

புதிதாக கட்டப்பட்டு வரும் மேல்நிலை குடிநீர் தொட்டியை கலெக்டர் ஆஷா அஜீத் பார்வையிட்டார்.

குடிநீர் திட்டத்துக்காக ரூ.1752 கோடிக்கு நிர்வாக ஒப்புதல்

Published On 2023-07-27 06:57 GMT   |   Update On 2023-07-27 06:57 GMT
  • குடிநீர் திட்டத்துக்காக ரூ.1752 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் அளித்தது.
  • கலெக்டர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, சிங்கம்புணரி ஆகிய பகுதிகளில் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் நடைபெற்றுவரும் கூட்டு குடிநீர் திட்டப்பணிகளை கலெக்டர் ஆஷா அஜீத் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்கிடும் பொருட்டு அதற்கான பணி கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி மாவட்டத்தில் உள்ள 8 பேரூ ராட்சிகள், 11 ஊராட்சி ஒன்றியங்கள், 3 நகராட்சி களுக்கான கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்த ரூ.1752.73 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.

இந்த திட்டம் முடிவுறும் தருவாயில் தற்கால மக்கள் தொகையின்படி 11.39 லட்சம் பொதுமக்களுக்கு 49.83 மில்லியன் லிட்டர் குடிநீர் கிடைக்கும். சிங்கம்பு ணரி பேரூராட்சி பகுதிக்குட் பட்ட தேனம்மாள்பட்டியில் 146 லட்சம் லிட்டர் கொள்ள வுள்ள தரைமட்ட நீர்தேக்க தொட்டியையும், 1118 மிமீ இரும்பு குழாய் பதிக்கும் பணியையும் மற்றும் காரைக்குடி நகராட்சிக்குட் பட்ட தி.சூரக்குடியில் பிர தான மேல்நிலை நீர்தேக்க தொட்டி ஆகியவைகளின் கட்டுமான நிலைகள் மற்றும் தரம் ஆகியவைகள் குறித்து, சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுடன் நேரில் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.

குடிநீர் திட்டப்பணிகளை தரமான முறையில் விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் நிர்வாக பொறியாளர் நிர்மலா, திட்டக்கோட்ட உதவி நிர்வாக பொறியாளர் ஜான்சிராணி, மானாமதுரை திட்டக்கோட்ட உதவி நிர்வா பொறியாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News