உள்ளூர் செய்திகள்

புவனேசுவரி அம்மன் கோவில்: திருவிளக்கு வழிபாடு

Published On 2022-08-15 09:08 GMT   |   Update On 2022-08-15 09:39 GMT
  • தேவகோட்டை புவனேசுவரி அம்மன் கோவிலில் பெண்கள் திருவிளக்கு வழிபாடு செய்தனர்.
  • வருகிற 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை பால்குடமும், இரவு பூச்சொரிதல் விழாவும் நடக்கிறது.

தேவகோட்டை

தேவகோட்டை-திருப்பத்தூர் சாலையில் உள்ள புவனேசுவரி அம்மன் கோவில் பூச்சொரிதல் விழா கடந்த 12-ந் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.

நேற்று 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடந்தது. மாங்கல்ய பாக்கியம், குழந்தை பாக்கியம், லட்சுமி பாக்கியம் மற்றும் சுப நிகழ்ச்சிகள் தடையின்றி நடைபெற வேண்டும் என்று பூஜையில் கலந்து கொண்ட பெண்கள் வழிபாடு செய்தனர். அம்மன் மகாலட்சுமி அலங்காரத்தில் அருள்பாலித்தார். சிறப்பு தீபாராதனை நடைபெற்று, அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தேவகோட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். வருகிற 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை பால்குடமும், இரவு பூச்சொரிதல் விழாவும் நடக்கிறது.

Tags:    

Similar News