உள்ளூர் செய்திகள்

நகராட்சி கூட்டம் நடைபெற்றபோது எடுத்த படம்.

நகர் மன்ற கூட்டம்

Published On 2023-07-05 07:29 GMT   |   Update On 2023-07-05 07:29 GMT
  • தேவகோட்டையில் நகர் மன்ற கூட்டம் தலைவர் தலைமையில் நடந்தது.
  • நகராட்சியில் இடைத்தரகர்கள் முற்றிலும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைவர் தெரிவித்தார்.

தேவகோட்டை

தேவகோட்டை நகராட்சி கூட்டரங்கில் சாதாரண கூட்டம் நகர் மன்ற தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் ரமேஷ், முன்னிலை வகித்தார். மேலாளர் ராஜேஷ்வரன் அனைவரையும் வரவேற்றார்.

துணைத்தலைவர் ரமேஷ் பேசுகையில் அரசு ஒதுக்கீடு செய்த எல்.இ.டி லைட்கள் பல நாட்கள் ஆகியும் இன்னும் அதன் பணி நடைபெறாமல் இருப்பது ஏன் என்றார்.

ஓவர்சீஸ் எல்.இ.டி லைட் பொருத்தும் பணி இன்னும் ஒரு சில வாரங்களில் தொடங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

தலைவர் சுந்தரலிங்கம் எல்.இ.டி லைட்கள் பொருத் தம் பணியை விரைவு படுத்த வேண்டும் என அதி காரியிடம் கேட்டுக் கொண்டார். கவுன்சிலர் முத்தழகு பேசுகையில் கருதாவூரணி கடந்த காலங்களில் நகராட்சி மூலம் மீன்கள் வளர்க்கப் பட்டு அவை குத்தகைக்கு விடப்பட்டு வந்தது. ஆனால் தற்பொழுது கழிவுநீரால் ஊரணி மாசு அடைந்துள்ளது.

தலைவர் சுந்தரலிங்கம் கடந்த நகர மன்ற கூட்டத்தில் கருதாவூரணி சுத்தம் செய்யப்பட்டு பழைய பயன் பாட்டுக்கு கொண்டு வரப் படும். கவுன்சிலர் அய்யப் பன் ஆணையாளர் பொறி யாளர் பணியிடம் காலியாக உள்ளது. நகரின் வளர்ச்சி திட்ட பணிகள் பாதிக்கப்படு கிறது. தலைவர் சுந்தரலிங்கம் நகராட்சியில் அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக உள்ளதை தீர்மானங்கள் ஏற்றி அனைவரும் உயர் அதிகாரிகளை சந்திப்போம்

துணைத்தலைவர் ரமேஷ் மாநகராட்சிகளை விட இங்கு வரி விதிப்பு அதிகமாக உள்ளது. வரி விதிப்பு மண்டலங்களை மறு ஆய்வு செய்து வரி விதிப்பு செய்ய வேண்டும். மேலும் இடைத்தரகர்கள் நகராட்சியில் அதிகரித்து வருகிறது என்றார். தலைவர் சுந்தரலிங்கம் நகராட்சியில் இடைத்தரகர்கள் முற்றிலும் அகற்ற நடவடிக்கை எடுக் கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News