சிங்கம்புணரியில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு மையம்
- சிங்கம்புணரியில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு மையத்தில் தேர்வாளர்கள் தேர்வு எழுதினர்.
- 1,547 பேருக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டு காலை 9 மணி முதல் தேர்வு தொடங்கியது.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகாவில் முதல் முறையாக டி.என். பி.எஸ்.சி. தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வு மையங்களாக செயின் ஜோசப் மகளிர் கல்லூரி, பாரிவள்ளல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மகாராஜா பாலிடெக்னிக் கல்லூரி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி என மொத்தம் 5 இடங்களில் 6 மையங்கள் தேர்வு செய்யப்பட்டு இன்று தேர்வு நடந்தது.
வழக்கமாக மதுரை, திருச்சி, திண்டுக்கல் போன்ற இடங்களில் சிங்கம்புணரி பகுதி தேர்வாளர்கள் சென்று எழுதி வந்த நிலையில் இந்த வருடம் டி.என்.பி.எஸ்.சி.க்கான தேர்வு மையங்கள் சிங்கம்புணரியில் அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த தாலுகா தேர்வாளர்கள் உற்சாகத்துடன் இன்று தேர்வு எழுதினர்.1,547 பேருக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டு காலை 9 மணி முதல் தேர்வு தொடங்கியது.
வட்டாட்சியர் கயல்செல்வி தலைமையில் நடைபெறும் இந்த தேர்வுகளில் மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் தனலட்சுமி முன்னிலையில் 2 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.சுந்தரராஜன் தலைமையில் ஒரு கண்காணிப்பு குழுவும், சிவராமன் தலைமையில் மற்றொரு குழுவும் என 2 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு தேர்வு மையங்களில் ஆய்வு அலுவலர்கள் வருவாய்த்துறை சார்பில் நியமிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.