உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை
- மானாமதுரையில் உளள கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை செய்தனர்.
- விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 15 கிலோ இனிப்பு வகைகளை பறிமுதல் செய்து அவற்றை அழித்தார்.
மானாமதுரை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் பகுதியில் இனிப்பு, கார வகைகள் விற்பனை கடைகளில் உணவு பாதுகாப்புத்து றையினர் திடீர் சோதனை நடத்தினர். உணவு பாதுகாப்பு ஆணையர் உத்தர–வின்படியும் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தலின் பேரிலும் சிவகங்கை உணவு பாதுகாப்பு அலுவலர் சர வணக்குமார் மானா மதுரை நகரிலுள்ள பல இனிப்பு வகை கள் விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வு நடத் தினார்.
இதில் தரமான முறையில் இனிப்பு, கார வகைகள் தயார் செய்யப்படுகிறதா? என்று கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது கெட்டுப்போன மற்றும் அதிக கலர் பொடி கலந்து உடல் ஆரோக்கியத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகை யில் தயாரித்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 15 கிலோ இனிப்பு வகைகளை பறிமுதல் செய்து அவற்றை அழித்தார்.
மேலும் இவற்றை பறிமு தல் செய்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் இனிப்பு வகைகளை விற்பனை செய்யும் கடை உரிமையாளர்களிடம் இனிப்பு, காரம் தயாரிப்புக்கு ஒருமுறை பயன்படுத்தும் எண்ணையை மீண்டும் வடி கட்டி பயன்படுத்த கூடாது. இனிப்பு வகைகளில் அதிக கலர் பொடி சேர்க்க கூடாது என்றும் சரவணக்குமார் அறிவுறுத்தினார்.