உள்ளூர் செய்திகள்

கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புழுதிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின்கீழ் மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கினார். அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் மோகனசந்திரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுத்து மற்றும் பலர் உள்ளனர்.

மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள்

Published On 2023-10-08 08:35 GMT   |   Update On 2023-10-08 08:35 GMT
  • அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் பெரிய கருப்பன் வழங்கினார்.
  • புரவலர் மேம்பாட்டு நிதியின் கீழ் பள்ளிகளுக்கு தலா ரூ.10, ஆயிரமும் அமைச்சர் தனது சொந்த நிதியிலிருந்து வழங்கினார்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட உலகம்பட்டி, வி.புதூர், கட்டுகுடிப்பட்டி அரசு மாதிரிப்பள்ளி, கரிசல் பட்டி, முசுண்டப்பட்டி, புழுதிப்பட்டி மற்றும் கட்டுகுடிபட்டி ஆகிய அரசு மேல்நிலை பள்ளிகளில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் தலைமை தாங்கினார். அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:

விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 68 அரசு பள்ளிகள் உள்ளிட்ட 105 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 4 ஆயிரத்து 270 மாணவர்கள், 6ஆயிரத்து 323 மாணவிகள் ஆக மொத்தம் 10 ஆயிரத்து 593 பேருக்கு இந்த ஆண்டு சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது.

எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 7 அரசு பள்ளிகளைச் சார்ந்த மொத்தம் 511 மாணவர்களுக்கு விலை யில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் உடல் நலம், சுற்றுச்சூழலை பேணிக் காத்திடும் நோக்கில், தமிழக அரசால் சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன. மாணவர்கள் சாலை விதிகளை முறையாக கடைபிடித்து, பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்ள வேண்டும்.

நிகழ்ச்சியில், 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்க தொகையும், புரவலர் மேம்பாட்டு நிதியின் கீழ் பள்ளிகளுக்கு தலா ரூ.10, ஆயிரமும் அமைச்சர் தனது சொந்த நிதியிலிருந்து வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்.மணிபாஸ்கரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுத்து, சிங்கம்புணரி வட்டாட்சியர் சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News