உள்ளூர் செய்திகள்

சட்ட விழிப்புணர்வு முகாமில் சார்பு நீதிபதி பரமேசுவரி பேசினார். அருகில் முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்த், வட்டார கல்வி அலுவலர் பால்ராஜ் மற்றும் பலர் உள்ளனர்.

சட்ட விழிப்புணர்வு முகாம்

Published On 2022-06-18 08:17 GMT   |   Update On 2022-06-18 08:17 GMT
  • மானாமதுரை அருகே சட்ட விழிப்புணர்வு முகாமில் இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள் என்பதை உண்மையாக்க வேண்டும் என நீதிபதி அறிவுரை வழங்கினார்.
  • மாணவர்கள் கல்வியில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், மானாமதுரை அருகில் உள்ள ராஜகம்பீரம் தனியார் மேல்நிலைப்பள்ளியில், 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அனைவரும் கட்டாயமாக கல்வி கற்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர்-சார்பு நீதிபதி பரமேசுவரி தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அனைவரும் கட்டாயமாக கல்வி கற்க வேண்டும். கல்வி ஒன்று தான் எதிர்காலத்தில் மாணவர்களுக்கு துணை நிற்கும். ''இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள்'' என்பதை மாணவர்கள் உண்மையாக்க வேண்டும். மாணவர்கள் கல்வியில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

இந்த முகாமில் முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்த், வட்டார கல்வி அலுவலர் பால்ராஜ், சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் வனராஜன், பள்ளி தாளாளர் சேவியர் சத்தியமூர்த்தி, தலைமை ஆசிரியர் செல்வன் ஆகியோரும் பேசினர்.

முகாமிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள், சட்டம் சார்ந்த தன்னார்வலர்களான நாகேந்திரன், காளிதாஸ் ஆகியோர் செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News