- சிவகங்கையில் வருகிற 12-ந் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது
- கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடக்கிறது.
சிவகங்கை
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பாக கருணாநிதியின் நுாற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் விதமாக தமிழ்நாடு முழுவதும் 100 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் 3 வேலைவாய்ப்பு முகாம்களை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் நடத்த உள்ளது. முதல் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 12-ந் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சிவகங்கை காஞ்சிரங்காலில் உள்ள அரசு மகளிர் கலைக்கல்லுாரியில் நடைபெற உள்ளது.
இத்தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமில் 5-ம் வகுப்பு முதல் 10 மற்றும் 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ. போன்ற கல்வித்தகுதியுடைய அனைவரும் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களது சுயவிபரம், கல்விச்சான்று, ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாளில் காலை 9 மணிக்கு வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம்.
இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலை நாடுநர்கள் https://bitly/svgjobfair1 என்ற இணைப்பில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜித் தெரிவித்து உள்ளார்.