உள்ளூர் செய்திகள்

புளியால் அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு

Published On 2022-12-07 07:56 GMT   |   Update On 2022-12-07 07:56 GMT
  • மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிக்கு புளியால் அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
  • தலைமையாசிரியர் நாகேந்திரன், பெற்றோர்- ஆசிரியர் கழக தலைவர் ஜோசப், உதவித் தலைமையாசிரியை விமலா மற்றும் பலர் பாராட்டினர்.

தேவகோட்டை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில் புளியால் அரசு பள்ளி மாணவர்கள் அதிக போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றனர். தனிப்போட்டி பிரிவில் 7-ம் வகுப்பு மாணவர் தமிழ் அமுதன் பறை போட்டியில் முதலிடமும், டிரம்ஸ் போட்டியில் ஜெகதீசுவரன் முதலிடமும், ஒயிலாட்ட போட்டியில் ஜீவிதாஷிரி முதலிடமும் பெற்றனர்.

9-ம் வகுப்பு மாணவர் வாசு பறை இசை போட்டியில் முதலிடமும், டிரம்ஸ் போட்டியில் அருண் முதலிடமும், கீ போர்டு போட்டியில் ஆல்வின் புஷ்பராஜ் முதலிடமும், செவ்வியல் நடனத்தில் சுருதி முதலிடமும், களிமண் சிற்ப போட்டியில் கமலேஷ் முதலிடமும், தனி நடன போட்டியில் முகிதா‌ 2-ம் இடமும், பானை ஓவியப் போட்டியில் ஜெயபாலா 2-ம் இடமும், தலைப்பை ஒட்டி வரைதல் போட்டியில் பால் தினகரன் 2-ம் இடமும், பல குரல் பேச்சு போட்டியில் ஹரி சதிஷ் 2-ம் இடமும் வெற்றி பெற்றனர்.

குழுப் போட்டியில் விவாத மேடையில் ரித்திஷ்குமார் குழுவினர் முதலிடமும், சமூக நாடகத்தில் முகமது ஹாரிஸ்‌, நித்திஷ்குமார் குழுவினர் முதலிடமும், கிராமிய நடனத்தில் வைஷ்ணவி, நிஷா குழுவினர் 2-ம் இடமும் பெற்றனர். அனைவரும் சிவகங்கை வருவாய் மாவட்ட அளவிலான கலைப் போட்டிக்கு தேர்வாகி உள்ளனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும், பயிற்சி அளித்த ஆசிரியர்கள் ஜோசப் இருதயராஜ், ஜெயந்தி ஆகியோரையும் தலைமையாசிரியர் நாகேந்திரன், பெற்றோர்- ஆசிரியர் கழக தலைவர் ஜோசப், உதவித் தலைமையாசிரியை விமலா மற்றும் பலர் பாராட்டினர்.

Tags:    

Similar News