உள்ளூர் செய்திகள்

மத நல்லிணக்க சந்தனக்கூடு ஊர்வலம்

Published On 2023-03-04 08:07 GMT   |   Update On 2023-03-04 08:07 GMT
  • கரிசல்பட்டியில் மத நல்லிணக்க சந்தனக்கூடு ஊர்வலம் நடந்தது.
  • சந்தனக்கூடு விழாவில் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

சிங்கம்புணரி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் அருகே உள்ள கரிசல்பட்டியில் 873-ம் ஆண்டு ஹஜ்ரத் பீர் சுல்தான் ஒலியுல்லாஹ் மத நல்லிணக்க சந்தனகூடு திருவிழா நடைபெற்றது. இதையொட்டி கடந்த 21-ந்தேதி மதியம் மதநல்லிணக்க கந்தூரி விழா மற்றும் இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி 10-ம் நாள் கே.புதுப்பட்டி, வலசைப்பட்டி, கரியாம்பட்டி இந்துக்களும், திருச்சி, மதுரை, புதுக்கோட்டை,சிவகங்கை கரிசல்பட்டி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த இந்து, முஸ்லீம், கிறிஸ்தவ மக்கள் ஒன்று சேர்ந்து மச்சி வீட்டு அம்மா தர்ஹாவில் மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட உருஸ் எனும் சந்தனகூடு ஊர்வலம் நடந்தது.

இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியே சென்றது. விழாவை முன்னிட்டு கண்ணை கவரும் வானவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் கரிசல்பட்டி சந்தனக்கூடு விழாவில் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News