உள்ளூர் செய்திகள்

திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் புளியால் பிரிவு சாலையில் விபத்துக்குள்ளான வேன்.

சென்டர் மீடியனில் வேன் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது

Published On 2023-05-24 08:28 GMT   |   Update On 2023-05-24 08:28 GMT
  • சென்டர் மீடியனில் வேன் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.
  • விபத்துக்களை தடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.

தேவகோட்டை

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் இருந்து ராமேசுவரத்திற்கு 13 பேர்களுடன் டூரிஸ்ட் வேன் சென்றது. இதை வந்தவாசியை சேர்ந்த டிரைவர் இளங்கோவன் (வயது30) ஓட்டினார்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் வேன் வந்தபோது புளியால் விலக்கு சென்டர் மீடியனில் மோதியது. இதில் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

சத்தம் ேகட்டு அருகில் உள்ளவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கெகாடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வேன் விபத்தில் காய மடைந்தவர்களை தேவ கோட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அனைவரும் சிறு காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தேவகோட்டை ரஸ்தா வில் இருந்து தற்போது புதிதாக போடப்பட்ட திருச்சி- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையின் பிரிவு சாலையில் சென்டர் மீடியனில் போதிய எச்சரிக்கை விளக்குகள் இல்லாததால் தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வருகிறது.

இரவு நேரங்களில் அதிக அளவில் விபத்துக்கள் நடக்கின்றன. உடனடியாக இந்த பிரிவு சாலையில் உள்ள சென்டர் மீடியன் பகுதியில் எச்சரிக்கை விளக்குகள் அமைத்து விபத்துக்களை தடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News