உள்ளூர் செய்திகள்

களிமண் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பு

Published On 2023-09-03 05:24 GMT   |   Update On 2023-09-03 05:24 GMT
  • களிமண் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
  • கைவினைஞர்களின் படைப்புகளுக்கு முக்கியத்து வம் கொடுத்து காக்க வேண்டும் என்றார்.

சிங்கம்புணரி

விநாயகர் சதுர்த்தி பண்டிகை வருகிற 18-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன் னிட்டு சிங்கம்புணிரியில் பிரமாண்ட களிமண் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. சிம்மாசனத்தில் அமர்ந்த விநாயகர், கஜமுக விநாயகர், வெற்றி விநாயகர் என பல்வேறு விநாயகர் உருவ சிலைகள் செய்யப் பட்டு வருகிறது.

அரசு விழாக்களில் பாரம்பரிய தொழில் செய்ப வர்களின் படைப்புகளை விற்பனைக்கு காட்சிப்படுத்த அரசு ஆவண செய்ய வேண்டும் என்பது இந்த தொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களின் கோரிக்கை யாக உள்ளது.

பாரம்பரியமாக சிலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் முத்துராமலிங்கம் கூறுகையில், எங்களுடைய தொழில் மாறிவரும் காலத்திற்கேற்ப மாறி வருகிறது. ஆனால் தற்போது பிளாஸ்டர் ஆப் பாரீஸால் செய்யப்படும் விநாகர் பொம்மைகள், சிலைகள் பிரபலமாகி வருகின்றன.

இவை பார்ப்பதற்கு அழகாக தெரிந்தாலும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதோடு நீர் நிலைகளை மாசுப்படுத்தக் கூடியவை.ஆகவே தமிழக அரசு அரசு விழாக்களில் கைவினைஞர்களின் படைப்புகளுக்கு முக்கியத்து வம் கொடுத்து காக்க வேண்டும் என்றார்.

Tags:    

Similar News