திருத்தளி நாதர் கோவில் தெப்ப உற்சவம்
- திருத்தளி நாதர் கோவில் தெப்ப உற்சவம் நடந்தது.
- நிகழ்ச்சி ஏற்பாடுகளை கார்காத்த வெள்ளாளர் உறவின்முறையினர் செய்திருந்தனர்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சிவகாமி உடனுறை திருத்தளிநாதர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாக திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.
இந்த ஆண்டு வைகாசி விசாக திருவிழா கடந்த
24-ந்தேதி கொடி யேற்றத்து டன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் விநாயகர், சுப்பிரமணியர், சோமஸ்கந்தர், பிரியா விடை அம்மன், சிவகாமி அம்மன் சிறப்பு அலங்கா ரத்தில் பூதம், அன்னம், ரிஷபம், சிம்மம், யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் உலா வந்தனர்.
5-ம் திருநாளான்று திருத்தளிநாதருக்கும், சிவகாமி அம்பாளுக்கும் திருக்கல்யாண வைபவம் நடந்தது. ெதாடர்ந்து 9-ம் நாளில் தேரோட்டம் நடந்தது. முதல் தேரில் விநாயகரும், நடுத்தேரில் பிரியாவிடையுடன் திருத்தளிநாதரும், 3-வது தேரில் சிவகாமி அம்மனும் எழுந்தருளினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் 10-ம் நாளான நேற்று இரவு கோவில் சீதளி குளத்தில் தெப்ப உற்சவம் நடந்தது. இதையொட்டி திருத்தளி தீர்த்தத்தில் தீர்த்தம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து கோவிலில் இருந்து சுவாமி அம்பாளுடன் தெப்ப மண்டபம் எழுந்தருளினார். அங்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
பின்னர் மின் விளக்கு களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி- சிவகாமி அம்பாள் எழுந்தருளினர். வான வேடிக்கை முழங்க தெப்பம் சீதளி குளத்தை வலம் வந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கார்காத்த வெள்ளாளர் உறவின்முறையினர் செய்திருந்தனர்.