உள்ளூர் செய்திகள்

காரைக்குடியில் நகராட்சித்துறை சார்பில் நிறைவடைந்த பாதாள சாக்கடை திட்டப்பணிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, பெரியகருப்பன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அருகில் கலெக்டர் ஆஷாஅஜீத், மாங்குடி எம்.எல்.ஏ., நகரசபை தலைவர் முத்துதுரை உள்ளனர்.

நகராட்சித்துறை சார்பில் நிறைவடைந்த பாதாள சாக்கடை திட்டப்பணிகள்

Published On 2023-05-28 08:14 GMT   |   Update On 2023-05-28 08:14 GMT
  • நகராட்சித்துறை சார்பில் நிறைவடைந்த பாதாள சாக்கடை திட்டப்பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
  • திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காரைக்குடி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நிறைவடைந்த பாதாள சாக்கடை திட்டப்பணிகளின் தொடக்க விழா நடந்தது.

கலெக்டர் ஆஷாஅஜீத் தலைமை தாங்கினார். காரைக்குடி நகரசபை தலைவர் முத்து துரை முன்னிலை வகித்தார். மாங்குடி எம்.எல்.ஏ. வரவேற்றார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவ தாஸ்மீனா, குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் தட்சிணாமூர்த்தி, நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா ஆகியோர் திட்ட விளக்கவுரை யாற்றினர்.

புதிய பாதாள சாக்கடை திட்டப்பணிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, ெபரியகருப்பன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

பின்னர் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், காரைக்குடி நகராட்சிப் பகுதிக்கென நகராட்சி நிர்வாகத்துறையின் மூலம் தற்போது ரூ.140.13 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களிடம் இருந்து சேகரிக்கப்படும் வீட்டு கழிவுநீர் நாளொன்றுக்கு நபர் ஒன்றுக்கு 110 லிட்டர் என்ற அளவில் கணக்கிடப்பட்டு, அதனடிப்படையில் கழிவுநீர் சேகரிப்பு குழாய்கள் வலை அமைப்பு வடிவ மைக்கப்பட்டு திட்ட செயலாக்கம் மற்றும் பராமரிப்புக்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப் பட்டு பணிகள் நிறைவு பெற்றுள்ளது என்றார்.

அமைச்சர் பெரியகருப்பன் பேசுகையில், காரைக்குடி நகராட்சி பகுதியில் உள்ள ஒவ்வொரு வார்டுகளிலும் பொதுமக்களுக்கு தேவையான சாலை வசதி, குடிநீர் வசதி, மின் வசதி, சுகாதார வளாகங்கள் உள்ளிட்ட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கைகளின் அடிப்படையில் கூடுதலாகவும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் கோரிக்கைகள் தொடர்பாக, கலெக்டர் அலுவலகத்திலோ அல்லது தங்களது பகுதி களுக்குட்பட்ட மக்கள் பிரதிநிதிகள் வாயிலாகவோ அல்லது முதல்வரின் முகவரி என்ற இணையதளத்தின் வாயிலாகவோ, இ.சேவை மையம் மூலமாகவோ மனுக்கள் அளித்து, அதன்மூலம் தீர்வு பெற்று, பயன்பெறலாம் என்றார்.

இந்த நிகழ்ச்சியில், காரைக்குடி நகர்மன்ற தலைவர் முத்துத்துரை, துணைத்தலைவர் குணசேகரன், திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News