சொர்ண காளீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக தெப்ப உற்சவம்
- சொர்ண காளீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக தெப்ப உற்சவம் 2-ந்தேதி நடக்கிறது.
- ஸ்தானிகர் காளீஸ்வர குருக்கள் மற்றும் விழாக் குழுவினர் செய்து வரு கிறார்கள்.
காளையார்கோவில்
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் மாமன்னர் மருதுபாண்டி யர்களால் கட்டப்பட்ட சொர்ண காளீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு வைகாசி விசாக திருவிழா கடந்த 24 நாட்கள் தொடங்கி கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது.
நேற்று சிகர நிகழ்ச்சியான திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. சொர்ண காளீஸ்வரருக்கும், அம்ம னுக்கும் நடந்த திருமணத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வருகிற 1-ந்தேதி காலை 9 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. மறுநாள் (2-ந்தேதி) வைகாசி விசாகத்தை முன்னி ட்டு தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. அன்று இரவு பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமி வீதி உலா நடை பெறும்.
விழாவை முன்னிட்டு தினசரி கோவிலில் ஆன்மீக சொற்பொழிவு, பக்தி இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
விழா ஏற்பாடுகளை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகி நாச்சியார் உத்திரவின் பேரில் தேவஸ்தான மேலாளர் இளங்கோ காளையார் கோவில் சரக கண்காணிப் பாளர் பாலசரவணன், ஸ்தானிகர் காளீஸ்வர குருக்கள் மற்றும் விழாக் குழுவினர் செய்து வரு கிறார்கள்.