- முறையூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது.
- தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள முறையூர் ஊராட்சியில் மே தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் என்.எம். சுரேஷ் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும், அடிப்படை கட்டமைப்பு-தேவைகள் மற்றும் குறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
கே.வி.வி.டி. வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குடிசைகள் கண்டறியப்பட்டு பயனாளிகளுக்கு வீடு கட்டித்தர தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாள்தோறும் சேரும் குப்பைகளை தூய்மை பணியாளர்களிடம் மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரித்து வழங்குமாறும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணிப்பை பயன்படுத்துமாறும் கிராம மக்களிடத்தில் அறிவுறுத்தப்பட்டது.
இதில் சிங்கம்புணரி யூனியன் ஆணையாளர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய குழு உறுப்பினர் சத்தியமூர்த்தி, துணைத் தலைவர் கதிரேசன் மற்றும் உறுப்பினர்கள், மகளிர் சுயநிதி குழுவினர், பணித்தள பொறுப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.