உள்ளூர் செய்திகள்

அரசு மேல்நிலைப்பள்ளி அமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

Published On 2022-06-26 08:43 GMT   |   Update On 2022-06-26 08:43 GMT
  • அரசு மேல்நிலைப்பள்ளி அமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்கின்றனர்.
  • 70ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களை உள்ளடக்கிய இந்த நகராட்சியில் அரசு மேல்நிலைப் பள்ளி இல்லாதது கேள்வி குறியாக உள்ளது.

தேவகோட்டை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி பழமையானது ஆகும். 70ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களை உள்ளடக்கிய இந்த நகராட்சியில் அரசு மேல்நிலைப் பள்ளி இல்லாதது கேள்வி குறியாக உள்ளது.

தேவகோட்டையில் 10-க்கும் மேற்பட்ட தனியார் மேல்நிலை பள்ளிகள் உள்ளன. அரசு மேல்நிலைப் பள்ளி இல்லாமல் குழந்தைகளை அதிக கட்டணத்தில் தனியார் பள்ளிகளில் சேர்க்க வேண்டிய அவலநிலையில் பெற்றோர் உள்ளனர்.

தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் செலுத்த முடியாதவர்கள் தேவகோட்டை அருகே உள்ள பெரியகாரை, அனுமந்தகுடி ஆகிய கிராமங்களில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகளை சேர்க்க வேண்டிய நிலையில் உள்ளனர். மாணவிகள் நகரில் இருந்து கிராமங்களுக்கு சென்று வர சிரமப்பட்டு வருகின்றனர்.

தனியார் பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மட்டுமே பிளஸ்-1 வகுப்பில் சேர்க்கப் படுகின்றனர். மாவட்ட கல்வி அலுவலகம் தேவகோட்டை நகரில் இருந்தும், நகருக்கு மேல்நிலைப்பள்ளி இல்லாதது கல்வித்துறை அதிகாரிகள் தனியார் பள்ளிகளுக்கு துணையாக செயல்படுகிறார்களோ? என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அதனால் தான் அரசு மேல்நிலைப் பள்ளி கொண்டு வரவில்லை என்று தெரிகிறது.காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தேர்தல் அறிக்கையில் தேவகோட்டை நகரில் அரசு மேல்நிலைப்பள்ளி கொண்டுவரப்படும் என உறுதி அளித்தார்.

ஆனால் வருடம் ஆகியும் மேல்நிலைப்பள்ளி இதுவரை வரவில்லை. நகரில் உள்ள மக்கள் குழந்தைகளின் மேல்நிலை படிப்பு அதிக கட்டணம் கொடுத்து தனியார் பள்ளிகளில் சேர்க்க வேண்டிய அவலநிலை தொடர்ந்து கொண்டே வருகிறது. இதற்கு முடிவு காணப்படும் நகர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரசு மேல்நிலைப்பள்ளி வருமா என பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

Tags:    

Similar News