உள்ளூர் செய்திகள்

ரேஷன் அரிசி கடத்திய வேன் கவிழ்ந்து கிடக்கும் காட்சி,

விழுப்புரத்தில் இன்று விபத்தில் சிக்கிய வேனில் ரேஷன் அரிசி கடத்தல்

Published On 2023-02-15 07:41 GMT   |   Update On 2023-02-15 07:41 GMT
  • அந்த வேனில் 5 பயணி கள் இருந்தனர். ஜானகிபுரம் மேம்பாலத்தில் இருந்து தரை இறங்கிய ேபாது அந்த வேன் நிலைதடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்தது.
  • டிரைவர் மற்றும் 5 பயணிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

விழுப்புரம்:

விழுப்புரம் தாலுகா போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி இன்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது திருச்சியில் இருந்து சென்னை மார்க்க மாக வேகமாக ஒரு வேன் சென்றது.அந்த வேனில் 5 பயணி கள் இருந்தனர். ஜானகிபுரம் மேம்பாலத்தில் இருந்து தரை இறங்கிய ேபாது அந்த வேன் நிலைதடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்தது.

அப்போது அதில் இருந்த டிரைவர் மற்றும் 5 பயணிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் சந்தேகம் அடைந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராம மூர்த்தி அந்த வேனை சோதனையிட்டார்அதில் 1¼ டன் ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வேனுடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் அதனை உணவு பாதுகாப்பு கடத்தல் பிரிவில் ஒப்படைத்தனர். என்றாலும் ரேஷன் அரிசி எங்கிருந்து கடத்தி வரப்பட்டது? இதனை கடத்தி வந்தவர்கள் யார்? தப்பி ஓடியவர்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News