தென்காசியில் தெற்கு மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்
- மக்களவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.
- தி.மு.க. வை வெற்றிபெற இப்போது முதலே தொண்டர்கள் அனைவருடன் இணைந்து களப்பணி ஆற்றுவேன் என்று ஜெயபாலன் பேசினார்.
தென்காசி:
தென்காசி அருகே இலஞ்சி யில் நடைபெற்ற தெற்கு மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி னார்.
வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமை தாங்கி பேசியதாவது:-
தேர்தலில் தென்காசி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 3 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட்டணி கட்சி வெற்றி பெற்றது. ஆனால் இனிவரும் தேர்தல்களில் 3 சட்டமன்ற தொகுதிகளிலும் தி.மு.க. வை வெற்றிபெற இப்போது முதலே தொண்டர்கள் அனைவருடன் இணைந்து களப்பணி ஆற்றுவேன். வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் தென்காசி தொகுதியை தி.மு.க. கைப்பற்ற இப்போது முதல் கட்சி நிர்வாகிகளுடனும், தொண்டர்களுடன் இணைந்து உழைப்பேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் தென்காசி தெற்கு மாவட்டத்திற்கு புதிய மாவட்ட பொறுப்பாளராக ஜெயபாலனை நியமித்த தி.மு.க. தலைவர், முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து, மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக ஏற்பட்ட பாலியல் வன்கொ டுமைக்கு துணை போகும் மத்திய அரசை கண்டித்து, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ள இளைஞர் அணி மாநாட்டில் தெற்கு மாவட்டம் சார்பாக திரளாக கலந்து கொள்வது, ராமநாதபுரத்தில் நடைபெற உள்ள பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான கூட்டத்தில் தெற்கு மாவட்டம் சார்பாக திரளாக கலந்து கொள்வது எனவும், தென்காசி மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரி அமையும் என அறிவிப்பு வெளியிட்ட முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.
தொடர்ந்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசும்போது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் எல்லோருக்கும் நல்லது நடக்கும். வருகிற மக்களவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். அதற்கு அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் சுந்தர மகாலிங்கம், பொருளாளர் ஷெரிப், துணைச் செயலா ளர்கள் கனிமொழி, தமிழ்ச்செல்வன், கென்னடி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செல்லத்துரை, முத்துப்பாண்டி, ஜேசுராஜன், ஆறுமுகச்சாமி பொதுக்குழு உறுப்பினர்கள் சீவநல்லூர் சாமித்துரை, அருள், ராஜேஸ்வரன், தமிழ்ச்செல்வி, ரஹீம், ரவிச்சந்திரன், சேக் தாவூத், சமுத்திரபாண்டி, எழில்வாணன், முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா, அப்துல் காதர் செல்லப்பா, ஒன்றிய செயலாளர்கள் அழகு சுந்தரம், செல்லத்துரை, மாரி வண்ணமுத்து, அன்பழகன், சிவன், பாண்டியன், சீனித்துரை, ஜெயக்குமார், மகேஷ் மாயவன், திவான் ஒலி, ரவிசங்கர், சுரேஷ், தென்காசி நகர்மன்ற தலைவரும், தென்காசி நகர செயலாள ருமான சாதிர், செங்கோட்டை நகரச் செயலாளர் வெங்கடேசன், அப்பாஸ், பேரூர் செயலாளர்கள் சுடலை, பண்டாரம், ராஜராஜன், வெள்ளத்துரை, தங்கப்பா, லட்சுமணன், ஜெகதீசன், அழகேசன், முத்து, சிதம்பரம், நெல்சன், கோபால், மாவட்ட வக்கீல் அணி வேல்சாமி, மேலகரம் பேரூராட்சிமன்ற துணைத் தலைவர் ஜீவானந்தம், மாவட்ட பொறியாளர் அணி தங்கபாண்டியன், இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் கிருஷ்ணராஜா, தொண்டரணி அமைப்பாளர் இசக்கி பாண்டியன், துணை அமைப்பாளர் குற்றாலம் சுரேஷ், இலஞ்சி பேரூராட்சி தலைவர் சின்னத்தாய், இலஞ்சி பேரூர் கழகச் செயலாளர் முத்தையா பாண்டியன், மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் ஆலங்குளம் ஒன்றிய குழு தலைவர் திவ்யா மணிகண்டன், மேலகரம் பேரூராட்சிமன்ற தலைவர் வேணி வீரபாண்டி யன், குத்துக்கல்வலசை ஊராட்சி மன்ற தலைவர் சத்யராஜ், மேலகரம் பேரூராட்சி மன்ற உறுப்பி னர்கள் சண்முகம் என்ற சேகர், கபில், நாகராஜ்சரவணார், குத்துக்கல்வலசை கிளைச் செயலாளர் காசிகிருஷ்ணன், அரசு முதல் நிலை ஒப்பந்ததாரர் கரையாளனூர் சண்முகவேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.