உள்ளூர் செய்திகள்

தென்காசி மாவட்டத்தில் சிறப்பு கல்வி கடன் முகாம் -கலெக்டர் தகவல்

Published On 2023-11-11 08:35 GMT   |   Update On 2023-11-11 08:35 GMT
  • சிறப்பு கல்வி கடன் முகாம் வருகிற 18-ந் தேதி மற்றும் 28-ந் தேதி ஆய்க்குடியில் நடைபெறுகிறது.
  • முகாமில் மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோருடன் உரிய ஆவணங்களுடன் பங்கு பெறலாம்.

தென்காசி:

தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் சிறப்பு கல்வி கடன் முகாம் வருகிற 18-ந் தேதி மற்றும் 28-ந் தேதி அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஆய்க்குடி ஜே.பி.பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.

அனைத்து கலை, பட்டய பொறியியல், மருத்துவம் உள்பட அரசு அங்கீகாரம் பெற்ற 3 ஆண்டிற்கு மேற் பட்ட அனைத்து கல்லூரி படிப்பிற்கான கல்வி கடனை எதிர்நோக்கி காத்தி ருக்கும் மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோருடன் ஆதார் அட்டை நகல், ரேசன் கார்டு நகல், வாக்கா ளர் அடையாள அட்டை நகல், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் - 3, பான்கார்டு நகல், 10,11,12-ம் வகுப்பு மற்றும் தற்போது படித்துக் கொண்டு இருக்கும் மதிப்பெண் சான்றிதழ் நகல், சான்றுகளுடன் கலந்து கொள்ளலாம்.

மேலும் பள்ளி மாற்று சான்றிதழ் நகல், வருமான சான்றிதழ் நகல், முதல் பட்டதாரியாக இருப்பின் அதற்கான சான்று நகல், சாதி சான்றிதழ் நகல், இருப்பிட சான்றிதழ் நகல், கல்லூரி கலந்தாய்வு மூலமாக பெறப்பட்ட (கவுன்சிலிங் சான்று) சேர்க்கைக்கான ஆவண நகல் கல்லூரி சேர்க்கை கடித நகல், கல்லூரி கட்டண விபரங்களுக்கான சான்று நகல் கல்லூரியின் அப்ரூவல் சான்று நகல் மற்றும் கல்வி கடன் பெறும் வங்கியின் பெயர், வங்கி கணக்கு எண், பாஸ்புக் நகலுடன் முகாம் நடைபெறும் இடத்திற்கு வந்து பயன் பெறலாம்.

தென்காசி மாவட்ட அனைத்து வங்கி ஒருங்கி ணைப்பாளர்களும் தங்கள் கிளைகளில் பரிசீல னையில் உள்ள கல்வி கடன் விண்ணப்பத்தினையும் மற்றும் 28-ந் தேதி வரை நடைபெறும் கல்வி கடன் முகாமில் பெறப்படும் அனைத்து கல்வி கடன் விண்ணப்பத்தினையும் பரிசீலனை செய்து தென்காசி மாவட்ட கல்வி கடன் இலக்கினை அடைய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News