மாநில அளவிலான கோகோபோட்டி-வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை- பரிசுத்தொகை
- போட்டிகளில் 40-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன.
- பெண்கள் பிரிவில் முதல் 2 இடங்களை ஸ்ரீகிருஷ்ணா பள்ளி, ஸ்டஅக்-ஹைடெக் பள்ளி பெற்றன.
ஆலங்குளம்:
இடைகால் ஸ்டஅக்-ஹைடெக் பள்ளியில் 3-ம் ஆண்டு ஸ்ரீசொக்கலிங்கம் ஞானப்பூ நினைவு சுழற்கோப்பைக்கான மாநில அளவிலான கோகோ போட்டிகள் நடைபெற்றன.
போட்டிகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 12 மற்றும் 14 வயதிற்குட்பட்ட மாணவ- மாணவிகள் 40-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. ஆண்களு க்கான 12 வயதிற்குட்ப ட்டோர் பிரிவில் முதல் 2 இடங்களை புதுச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் ஸ்டஅக் ஹை-டெக் பள்ளி பெற்றன. பெண்கள் பிரிவில் முதல் 2 இடங்களை கன்னியா குமரி ஸ்ரீகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி மற்றும் ஸ்டஅக்-ஹைடெக் பள்ளி பெற்றன. ஆண்களுக்கான 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் முதல் 2 இடங்களை புதுச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா மேல் நிலைப்பள்ளி பெற்றன. பெண்கள் பிரிவில் முதல் இரண்டு இடங்களை ஸ்ரீகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி மற்றும் கிராமக் கமிட்டி மேல்நிலைப்பள்ளி பெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றி க்கோப்பை, பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்களை பள்ளி தலைவர் முருகன், தாளாளர் புனிதா செல்வி, முதல்வர் பிரவின்குமார் மற்றும் பள்ளி ஆலோசகர் ஜோசப் ஆகியோர் வழங்கினர். போட்டிக்கான ஏற்பாடு களை பள்ளியின் உடற்கல்வி துறை ஆசிரியர்கள் செய்திருந்தனர்.