தஞ்சையில் மின்கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
- ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தியும், தி.மு.க. அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
- ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர்:
மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வை கண்டித்தும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்தும் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி இன்று தஞ்சை ரெயில் நிலையம் முன்பு அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு திருவாரூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அ.தி.மு.க. அமைச்சருமான ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
மாநில அம்மாபேரவை இணை செயலாளர் காந்தி, தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ராஜமாணிக்கம், முன்னாள் மருத்துவ கல்லூரி பகுதி செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தியும், தி.மு.க. அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.