உள்ளூர் செய்திகள்

குடும்ப உறுப்பினரான செல்லபிராணி... கருவுற்ற நாயிற்கு வளைகாப்பு நடத்தி அசத்திய குடும்பத்தார்

Published On 2023-11-22 10:30 GMT   |   Update On 2023-11-22 10:30 GMT
  • சாதாரணமாக கருவுற்ற தாய்மார்களுக்கு செய்யப்படும் அனைத்து சடங்குகளையும் செல்லப்பிராணி லூசிக்கு பழனிவேல் குடும்பத்தார் செய்தனர்.
  • விழாவிற்கு அக்கம் பக்கத்தினரை அழைத்து அவர்களையும் இதில் பங்கேற்க வைத்தனர்.

சிதம்பரம்:

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் தாலுகா காவாலக்குடி கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல் அம்புஜவல்லி தம்பதியினரின் மகள் பவித்ரா ஒரு நாய்க்குட்டியை வளர்த்து வருகின்றார். இதற்கு லூசி என்று பெயரிட்டு தங்களின் குடும்பத்தில் ஒருவர் போல கவனித்து வருகின்றனர்.

தற்போது லூசி கருவுற்ற நிலையில் அதற்கு வளைகாப்பு செய்ய பழனிவேல் குடும்பத்தார் முடிவு செய்தனர். லூசியை அலங்கரித்து பூ அணிவித்து, சேரில் அமரவைத்தனர். அதற்கு தங்க நெக்லசினை அணிவித்து மஞ்சள், குங்குமத்தால் பொட்டு வைத்தனர்.

மேலும், லூசிக்கு பிடித்த உணவுகளை அதற்கு முன்பாக வைத்து, கருவுற்ற லூசி நல்ல முறையில் குட்டிகளை ஈன்ற வேண்டுமென கடவுளிடம் பிரார்த்தனை செய்தனர். சாதாரணமாக கருவுற்ற தாய்மார்களுக்கு செய்யப்படும் அனைத்து சடங்குகளையும் செல்லப்பிராணி லூசிக்கு பழனிவேல் குடும்பத்தார் செய்தனர். இவ்விழாவிற்கு அக்கம் பக்கத்தினரை அழைத்து அவர்களையும் இதில் பங்கேற்க வைத்தனர்.

வளர்ப்பு பிராணிகளுக்கும், அதன் உரிமையாளர்களுக்கும் உள்ள நெருக்கத்தை விளக்கும் மற்றொரு சம்பவமாக இந்நிகழ்வு அமைந்துள்ளது. எத்தனை அறிவியல் நம்மை ஆளச் செய்தாலும் இது போன்ற நிகழ்வுகள் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது.

லூசியின் வளைகாப்பு நிகழ்ச்சியும் அதுபோல அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது அப்பகுதியில் பேசும் பொருளாக மாறியதுடன், செல்லப்பிராணி வளர்ப்பவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News