உள்ளூர் செய்திகள்

மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் சுற்றித்திரியும் கரடி- சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

Published On 2023-04-06 09:45 GMT   |   Update On 2023-04-06 09:45 GMT
  • மாஞ்சோலை 12-ம் காடு என்ற பகுதியில் கரடி ஒன்று சுற்றி திரிந்து கொண்டிருந்தது.
  • சிறிது நேரம் நின்ற நிலையில் தேயிலை செடிகளுக்கள் புகுந்து கரடி மாயமானது.

கல்லிடைக்குறிச்சி:

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்பட்ட மாஞ்சோலை, ஊத்து, நாலு முக்கு, காக்காச்சி ஆகிய தேயிலை தோட்ட பகுதிகள் உள்ளன. மேலும் இப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகளும் உள்ளன.

இந்த நிலையில் மாஞ்சோலை 12-ம் காடு என்ற பகுதியில் கரடி ஒன்று சுற்றி திரிந்து கொண்டிருந்தது. தொடர்ந்து சிறிது நேரம் நின்ற நிலையில் தேயிலை செடிகளுக்கள் புகுந்து மாயமானது. இந்த நிலையில் அவ்வழியாக சென்ற சுற்றுலா பயணிகள் அந்த கரடியை வீடியோ எடுத்துள்ளனர்.

தற்போது அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஏற்கனவே கடந்த மாதம் மாஞ்சோலையில் சுற்றித்திரிந்த சிறுத்தை ஒன்று தேயிலைத் தோட்ட பெண் தொழிலாளியை தாக்கியது.

Tags:    

Similar News